கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை!!

514

பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பணம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பலியானவர் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவராகும். அத்துடன், கொலையாளி என சந்தேகிக்கப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேதுருதுடுவ பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.