மென்பொருள் பாதுகாப்பு துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சமீபத்தில் 3.65 கோடி அண்ட்ரொய்ட் ஸ்மார்ட்போன்களை ஜூடி எனும் மால்வேர் (Judi malware) பாதித்ததைத் தொடர்ந்து கூகுளின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிதாய் வெளியிடப்படும் அண்ட்ரொய்ட பதிப்புகள் மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்படுவதால், சமீபத்தில் கூகுள் பக் கண்டறிதல்(Bug Founding) திட்டத்தில் யாரும் பரிசு பெறவில்லை.
இதனால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை ஈர்க்கும் வகையில் Bug Founding திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பரிசுத் தொகை 200,000 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்ட்ரொய்ட் இயங்குதளத்திற்கான Bug Founding திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூகுள் துவங்கியது.
இத்திட்டத்தின் கீழ் பிழை கண்டறிபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்படும் பரிசுத் தொகை பொறியாளர்கள் கண்டறியும் பிழையை சார்ந்து நிர்ணயம் செய்யப்படும்.