வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில்இடம்பெற்ற சூழல் தின நிகழ்வுகள் (படங்கள்)

1045

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு.சசிகுமார் தலைமையில் சூழல் தினம் யூன்- 05 ஆம் திகதியான நேற்று கொண்டாடப்பட்டது.
அன்று முதல் நிகழ்வாக பாடசாலை அதிபரின் சூழல் தொடர்பான உரை காலை பிரார்தனை கூட்டத்தில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து மாணவியின் சூழல் தொடர்பான பேச்சு இடம்பெற்றது. தொடர்ந்து பாடசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .