தெலுங்கானா மாநிலத்தில், போலி சாமியார் ஒருவரின் பேச்சை கேட்டு, சிவலிங்கத்தை தேடி, தேசிய நெடுஞ்சாலையை தோண்டி நாசப்படுத்தி உள்ளனர்.
ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியில் ஐதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் சிவ லிங்கம் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிவ பக்தர் லாகான் மனோஜ் (வயது 30) கூறிஉள்ளார்.
கனவில் கடவுள் சிவன் வந்து அப்பகுதியில் லிங்கம் புதைந்து கிடப்பதாகவும், அதனை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறும் கூறியதாக லாகான் மனோஜ் கூறிஉள்ளார்.
இதனையடுத்து குறிப்பிட்ட அப்பகுதியில் ஐதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூஜை செய்து தோண்டும் பணி நடைபெற்று உள்ளது.
கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் அவருடைய பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த பொலிசார், போலி சாமியார் மனோஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.






