நடிகையாக ஜெயித்திருந்தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்துள்ளதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது மும்பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சி கதாபாத்திரங்களே அவரை தேடி வருகின்றது. இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது, இன்று நான் பெரிய நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கலாம். ஆனால், நான் நிஜ வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்துவிட்டேன். நட்சத்திர அந்தஸ்தை பெற நான் நிறைய இழந்திருக்கிறேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்கிறது.
நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் தயாரிப்பாளருடன் ஒரு இரவு படுக்கையை பகிர வேண்டும் என்றார்கள். நீ முடியாது என்றால் வேறு ஒருவருக்கு இந்த வாய்ப்பு என்றார்கள். இதை கேட்டு பாதி மனதோடு பதில் சொல்வதற்குள் உயிரே போய்விட்டது. இப்படி உயிரை விட்டே சினிமாவுக்கு வந்தேன்.
நான் முதலில் கூச்ச சுபாவம் உள்ளவளாக இருந்தேன். அங்கம் தெரியாதபடி உடை அணிந்தேன். தற்போது அந்த வெட்கம், பயம் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை.
சினிமா நட்சத்திர அந்தஸ்தை பெற நிறைய இழந்துவிட்டேன். சினிமா என்னை சிதைத்துவிட்டது. விருப்பமே இல்லாமல் பட வாய்ப்புக்காக ஒருவருடன் இருப்பது கொடுமை. நான் இப்படி பளிச்சென்று பேசுவதால் சிலர் என்னை திட்டுகிறார்கள், சிலர் பாராட்டுகிறார்கள் என்கிறார் சன்னி லியோன்.






