பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை : அவரே குழந்தையை கொன்ற கொடூரம்!!

848

தமிழ்நாட்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த குழந்தையை வீட்டின் கூரையில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னை நகரில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் கூரையில் பிறந்த குழந்தை ஒன்று அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னர், குழந்தை இறந்தது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சரவணனின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவி என்பவருக்கும் தவறான உறவு ஏற்பட்டு அதன் மூலம் மாணவி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவிக்கு கடந்த 28ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையை மாணவி தனது வீட்டின் கூரையில் தூக்கி வீசி கொன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாணவி மற்றும் அவர் குடும்பத்தாரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.