அரங்கத்தை அதிரவைத்து, அழவைத்த மாற்றுத்திறனாளிப் பெண்!!(வீடியோ)

249


அமெரிக்காவில் America’s Got Talent 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திறமை உள்ளவர்கள் எவரும் தங்கள் திறமையை நிரூபிக்கலாம்.அந்நிகழ்ச்சியில், காது கேட்கும் திறனை இழந்தாலும், மென்டி ஹார்வே எனும் இளம் பெண் ஒருவர் தன்னுடைய இசை அதிர்வுகளை பாதங்களின் வழியே உணர்ந்து பாடிய அதிசயம் நடந்துள்ளது.

இவர் பாடிய பாடலைக் கேட்டு அரங்கில் இருந்த ஒட்டு மொத்த மக்களின் கண்களிலும் கண்ணீர் வந்தது. அந்தளவிற்கு இருந்தது அப்பெண்ணின் திறமை.அங்கிருந்த நடுவர்களில் சிலரும் தங்கள் கண்களை ஒன்றும் தெரியாதது போல், துடைத்துக் கொண்டனர்.பாடல் முடிந்தவுடன் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டி ஆரவாரம் செய்த போது, அப்பெண் உணர்ச்சியை அடக்கமுடியாமல் அழுதார். இதைக்கண்ட அவரின் தந்தை சற்று நேரம் பிரமித்துப்போய் நின்றார்.


யூடியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ள மென்டி ஹார்வேயின் பாடலை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் தமது கண்களிலும் கண்ணீர் வருவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.