நடிகை த்ரிஷா மீதான வழக்கு ஒத்திவைப்பு!!

518

வருமானத்தை மறைத்ததாக நடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு எதிராக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பிரபல திரைப்பட நடிகை த்ரிஷா கடந்த 2010-11ம் நிதி ஆண்டில் தனது வருமானமாக 89 லட்சம் ரூபாய் கணக்கு காட்டியிருந்தார்.

ஆனால் 2011-2012ல் ஒப்பந்தமான படங்களுக்கு 2010-2011ம் ஆண்டே பெற்ற ஊதியம் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டாமல் நடிகை த்ரிஷா வருமான வரித்துறையை ஏமாற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பின்னர் தான் மறைத்த வருமானத்தை த்ரிஷா கணக்கில் காட்டினார். ஆனால் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை த்ரிஷாவுக்கு 1 கோடியே 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை ரத்து செய்யக்கோரி த்ரிஷா சென்னையில் உள்ள வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்.

இதை விசாரித்த தீர்பாயம் த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தது. இந்நிலையில், அபராத ரத்து உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று விசாரணைக்கு வந்த மனுவை நீதிமன்றம் அடுத்து வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.