டொனால்ட் டிரம்பை விட சிறப்பாக செயற்படுவேன் என்கிறது ரோபோ சோபியா!!(வீடியோ)

270


 
ஜெனிவாவில் மனிதனைப்போன்ற உருவமுள்ள ரோபோ ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோபியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோ, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட தான் சிறப்பாக செயற்படுவேன் என சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரிக்கும் ஆற்றல் கொண்ட இந்த ரோபோவின் கண்கள் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரோபோ 60 வகையான முகபாவனைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்இந்த ரோபோவிற்கு மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்திறன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்திறன் காரணமாக ரோபோவினால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.Hanson Robotics இன் நிறுவனரும் டிஸ்னியில் பணியாற்றியவருமான இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.உயிரிழந்த முன்னாள் ஹொலிவுட் நடிகையான Audrey Hepburn ஐப் போன்ற தோற்றத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.