வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக மக்கள் பாதிப்பு!!

789

 
வவுனியாவில் தொடரும் கடும் வறட்சியான காலநிலையினால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கடந்த கால போக நெற்செய்கைக் காலப்பகுதியில் இருந்து கடும் வறட்சியுடனான காலநிலை நீடித்து வருகிறது.

இதனால் விவசாயிகளின் தோட்டச் செய்கை நடவடிக்கைகள், சிறுபோக நெற்செய்கை என்பன பாதிப்படைந்துள்ளதுடன், அவை கடுமையான வெப்பம் காரணமாக கருகி காட்சியளிக்கின்றன.

இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன், விவசாயத்துடன் இணைந்ததாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்கள் தமது கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி அவதிப்படுகின்றனர்.

இதேவேளை வவுனியாவின் பல பகுதிகளில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.