வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் எதிர் எதிரே பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் சிறிய வான் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (10.06.2017) காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியா- பூந்தோட்டம் வீதியில் பூந்தோட்டம் சந்திக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் எதிரே வந்த வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







