வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு வலயத்தில் நேற்று (09.06.2017) காலை 10 மணியளவில் புதிதாக நிர்மாணிக்கபட்ட அலுவலர்கள் விடுதி வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசாவினால் திறந்துவைக்கப்பட்டது.
அறிவினை மையமாகக் கொண்டு பாடசாலைக் கல்வியினைப் புனரமைத்தல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கயின் நிதி உதவியுடன் வவுனியா வடக்கு கல்வி வயலத்தில் நீண்டநாள் தேவையாக இருந்த ஊழியர்கள் விடுதியினை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா அவர்கள் திறத்து வைத்தன் பின் இடம்பெற்ற வவுனியா வடக்கின் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான அதிபர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் பாடசாலைகளில் வகுப்பறைகளில் அதிபர் ஆசிரியர்கள் நீண்ட நேரம் கையடக்க தொலைபேசியுடன் தான் நேரத்தை செலவிடுவதாக குறிப்பிட்டதுடன் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசி தடை செய்யபட்டுள்ளமையையும் சுட்டி காட்டினார் …