வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதி தற்காலிகமாக முடப்பட்டுள்ளது!!

548

 
வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத பாதையில் இருந்த புகையிரத பாதுகாப்பு கடவை உடைந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியில் போக்குவரத்துத் தடை ஏற்ப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதம் இன்று (10.06.2017) இரவு 9.50 மணியளவில் வவுனியாவை அண்மித்தது. இதனால் வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள ( வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில்) புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்ட சமயத்தில் கடவை உடைந்து வீழ்ந்தது. இதனால் வவுனியா – வைரவப்புளிங்குளத்திற்கான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்போது அவ்விடத்தில் புகையிரத சமிச்சை ஒளி சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதுடன் வைரவப்புளியங்குளம் வீதிக்கான பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.