வவுனியாவில் கடையொன்று தீக்கிரை : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!

722

 
வவுனியா இரட்டைபெரியகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கடையொன்று நேற்று (10.06.2017) இரவு 10.30 மணியளவில் தீக்கிரையானதில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் தீவிபத்தினால் மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டி உட்பட பல பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன். இத் தீ விபத்து எவ்வாறு ஏற்ப்பட்டது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.