அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்கள் அதிகரித்தால் நடவடிக்கை!!

252

சீனி உட்­பட 12 அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­கான விலை­களை தன்­னிச்­சை­யாக அதி­க­ரிக்கும் வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என வர்த்­தக வாணிபத்­துறை அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் பட்­டிப்­பளை பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட கொக்­கட்­டிச்­சோ­லையில் அமைக்­கப்­பட்ட இலங்­கையின் 378ஆவது ச.தொ.ச விற்­பனை நிலையம் நேற்றுக் காலை திறந்­து­வைக்­கப்­பட்­டது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பட்­டி­ருப்பு தொகுதி அமைப்­பாளர் சோ.கணே­ச­மூர்த்தி தலை­மையில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் வர்த்­தக வாணி­பத்­துறை அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார்.

சிறப்பு அதி­தி­யாக கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்­சரும் பட்­டிப்­பளை பிர­தேச அபி­வி­ருத்­திக்­கு­ழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி கலந்­து­கொண்டார்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் படு­வான்­கரை பிர­தே­சத்தில் முதன்­மு­றை­யாக அரச விற்­பனை நிலையம் ஒன்று அமைக்­கப்­பட்டு திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

விவ­சா­யி­களும் வறுமை நிலையில் உள்ள மக்­களும் அதி­க­மாக வாழும் இப்­ப­குதி மக்கள் பயன் அடையும் வகையில் அனைத்து வச­தி­க­ளையும் கொண்­ட­தாக இந்த விற்­பனை நிலையம் அமைக்­கப்­பட்டு திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வருடம் நிறை­வ­டை­வ­தற்குள் 500 ச.தொ.ச விற்­பனை நிலை­யங்கள் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வர்த்­தக வாணி­பத்­துறை அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் தெரி­வித்தார்.

சீனி உட்­பட 12 பொருட்கள் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு நேற்று வர்த்­த­மா­னி மூலம் ­தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.இந்த பொருட்­க­ளுக்கு நினைத்­த­வாறு விலை­களை அதி­க­ரிக்­க­முடியாது.

சீனிக்­கான தீர்வை விலையை 10ரூபா­வினால் அதி­க­ரித்­த­தற்­கா­கவும் அதன்காரணமாக நுகர்வோருக்கான சீனியின் விலையினை வர்த்தகர்கள் அதிகரிக்கமுடியாது எனவும் தெரிவித்த அமைச்சர் இவற்றினை கண்காணிப்பதற்காக 200அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.