மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய ஒருவர் கைது!!

1315

மட்டக்குளி பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குரிய ரொட்ரியோ பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பிறிதொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் 05 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது சந்தேகநபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கு நிதி அனுசரணைகளை வழங்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் வழங்கியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வத்தளை ஹேகித்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இன்று (12) கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொலிஸ் குற்றவிசாரணை பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.