வவுனியாவில் “வாக்கு உங்கள் உரிமை அது உங்கள் பலம்” : விழிப்புணர்வுப் பேரணி!!

1128

 
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (12.06.2017) காலை 9.30 மணியளவில் வாக்கு உங்களின் உரிமை அதனைவிட உங்கள் பொறுப்பு எனும் தொனிப்பொருளில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் விழிப்புணர்வு பேரணியொன்று நடைபெற்றது.

பேரணியில் வாக்கு உங்கள் உரிமை , என் வாக்கு என் எதிர்காலம், உங்கள் வாக்கு உங்கள் உரிமை, வாக்களிப்பது நம் கடமை என பல்வேறு பதாதைகளை தாக்கிய வண்ணம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்  எம்.பி.றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கிராம சேவையாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தேர்தல் திணைக்கள  உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் பேரணியானது புகையிரத வீதியூடாக முத்தையா மண்டபத்தினை சென்றடைந்து நிறைவுற்றது.