யாழில் பொலிஸ் மீது கத்தி வெட்டு : 7 பேர் கைது!!

452

police

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கத்தியால் வெட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமையன்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகியிருப்பதை யாழ் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா உறுதிப்படுத்தினார்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பொலிஸ்காரர்களில் ஒருவர் மீதே அடையாளம் தெரியாதவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பொலிசார் மீது நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதலின்போது, சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்காகப் பொலிசார் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.