நடுக் கடலில் தத்தளித்த 70 பேர் மீட்பு!!

906

boat

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோமீற்றர் தொலைவில் படகு பழுதடைந்தமையின் காரணமாக ஆபத்துக்கு முகங்கொடுத்த 70 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் 70 பேரும் பாதுகாப்பான நிலையில் நேற்று காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தொழிநுட்ப கோளாறு காரணமாக படகு தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோமீற்றர் தொலைவில் பழுதடைந்துள்ளது.

இந்நிலையில் படகில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த கப்பலில் 13 சிறுவர்கள், 13 பெண்கள் மற்றும் 46 ஆண்களும் பயணித்துள்ளனர்.



படகிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றதடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், கற்பிட்டியிலிருந்து இவர்கள் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ளனர்.