இந்திய அணி அபார வெற்றி.. அரை இறுதிக்கு தெரிவாவது உறுதி..

804

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு சார்பாக கெய்ல், சார்ல்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர் . கைல்ஸ் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார். சார்லஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 60 ஓடங்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து வந்த பிராவோ 35 ஓட்டங்களையும்,போலர்ட் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.இறுதிவரை அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சமி நான்கு ஆறு ஓட்டங்கள் உட்பட 35 பந்துகளில் 50 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேற்கிந்திய தீவு அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

India v West Indies: Group B - ICC Champions Trophy

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா 52 ஓட்டங்களையும், கொஹ்லி 22 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தவான் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது இந்த தொடரில் இவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது 100 ஓட்டங்களாகும்.

இந்திய அணி 39.1 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை அடைந்து மேற்கிந்திய தீவு அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இன்றைய போட்டியின் சிறபாட்டகாரராக 5 விக்கெட்டுகளை பெற்ற ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது..

~கேசா~