எதிர்கட்சித் தலைவர் வடக்கு முதல்வரை சந்தித்து பேசத் தயார்!!

249

வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சை நிலைமை தொடர்பாக வடக்கு முதல்வர் எதிர்கட்சித் தலைவருக்கு நேற்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதற்கான பதிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் வழங்கியுள்ளார். தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தவிடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்து வடக்கு ஆதீனம் ஸ்ரீPலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் வண.பிதா.ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்க கூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வடமாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ளேன்.

அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பை மேற்கொண்டுள்ளேன். எல்லாம் நலமாகவே அமையட்டும்.

நாம் வெகுவிரைவில் சந்தித்தது பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளேன்.

இரா. சம்பந்தன்

தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு