சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றிக் கொண்ட பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று தனது தாய் நாட்டை சென்றடைந்தது. லாஹூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீரர்களுக்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் பெற்ற அபார வெற்றி மூலம் தன் வசப்படுத்தியிருந்தது. பாக்கிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்ட முதற் சந்தர்ப்பமாக இது அமைந்தது.
பீ பிரிவில் இம்முறை போட்டிகளில் கலந்து கொண்டிருந்த பாக்கிஸ்தான் அணியைப் பொறுத்தளவில் இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பிடித்திருந்தனர்.
தீர்மானமிக்க இலங்கை அணியுடனான போட்டியை வெற்றி கொண்டதன் மூலம், இம்முறை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதிப் படுத்திக் கொண்ட பாக்கிஸ்தான் அணி, இறுதிப் போட்டியில் தன் அயல் நாடான இந்திய அணியை ஓவல் மைதானத்தில் சந்தித்தது.
பல இலட்சக்கணக்கான இரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பலம் வாய்ந்த இந்திய அணியை தோற்கடித்த பாக்கிஸ்தான் தனது பெயரை மீண்டும் ஒரு முறை பலமான அணி என்று பொறித்துக் கொண்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் ,புதிய உத்வேகத்தை கண்டுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர் மிகி ஆதர் தெரிவித்துள்ளளார்.







