நாடுமுழுவதும் அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

235

சுகாதார அமைச்சு வளாகத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 62 மாணவர்கள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்குள் நேற்று (21.06) மாலை பலவந்தமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மாணவர்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் விசேட அதிரடிப் படை உறுப்பினர்கள் மூவரும், பொலிஸ் அதிகாரிகள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவத்தில் 96 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்தியர்கள் சங்கம் இன்று காலை 8 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

பணிபகிஷ்கரிப்பை நிறைவு செய்யும் காலம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.