வவுனியா வசந்தி திரையரங்கில் நடிகர் விஜயின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா இளைஞர்கள் நேற்று (22.06.2017) திரையங்கினை அலங்காரம்செய்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஷேட காட்சியாக போக்கிரி படம் காண்பிக்கப்பட்டது.
அதைப்போல் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடமும் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் வவுனியாவில் கொண்டாட்டப்பட்ட சமயத்தில் அச் செய்தியினை எமது வவுனியா நெற் இணையத்தில் வெளியிட்டிருந்தோம். இப் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பலரும் தமது கண்டனங்களை பதிவுசெய்திருந்தனர்.
தாயகத்தில் தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்து தமது வாழ்க்கையை தியாகம் செய்த பல தலைவர்களை மறந்த இந்த இளம் சமுதாயத்தினர் ஒரு தென்னிந்திய சினிமா நடிகருக்கு இவ்வாறு பிறந்தநாளை கொண்டாடுவது தொடர்பாக வவுனியாவில் பலரும் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர்.















