கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.
பட வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வந்த ப்ரியா, தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேயாத மான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார் இயக்குநர் ரத்தினகுமார்.
கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார். இசை – சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார். இப்படத்தின் தொடக்க விழா கடந்த 23ம் திகதி நடைபெற்றது.
Share This






