யாழில் இரவில் தோன்றிய ஒளிக்கீற்று : வீதிக்கு வந்த மக்கள்!!

986

 
யாழ்ப்பாணத்தின் வான்வெளியில் பறக்கும் தட்டு பறப்பதாக இராப்பொழுது செய்திகள் உலாவர ஒருசாரார் பதற்றமடைய ஒருசாரார் விடுப்பு பார்க்க வீதிகளிக்கு வந்துள்ளனர்.

யாழில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் ஆராய்ந்த போது உண்மை நிலை வெளிவந்துள்ளது.

இந்த நிலையில், புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதன்போது அங்கு பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவற்றையே சிலர் பறக்கும் தட்டு என்று வதந்திகளை ஏற்படுத்த அந்த செய்தி 3 மணித்தியாலங்கள் உண்மைச் செய்தி போல உலாவி வந்தன.

ஆனால் அந்த ஒளிவட்டத்திற்கான காரணம் தெரியவர மக்கள் மத்தியில் பதற்றம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தனர்.

இதேவேளை, யாழ். மக்கள் இந்த ஒளிக்கீற்றை பார்வையிடுவதற்காக வீதிகளில் வந்து வேடிக்கை பார்த்துள்ளதுடன், இந்த ஒளிவட்டம் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.