ரயில் பாதையில் நடப்பவர்களுக்கு எச்சரிக்கை!!

938

ரயில் பாதையில் நடப்போரை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 29ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

தங்களதும் ஏனையவர்களினதும் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் ஆபத்தான முறையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தி இவ்வாறான நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். இவ்வாறு ரயில் பாதையில் நடப்போருக்கு மூவாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது.

26 பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கரையோரப் பாதுகாப்பினை இலக்கு வைத்து இந்த சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள உள்ளனர்.

முதலில் கரையோரப் பகுதிகளில் இந்த சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆபத்து மற்றும் இவ்வாறு ரயில் பாதையில் நடப்பதனால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.