வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா-2017!!(படங்கள், காணொளி)

1652

 
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(26.06.2016) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பக்த அடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க பிரதிஷ்டை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் நிகழ்வில் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இவர்களுக்காக விசேட பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் போக்குவரத்துச் சபையும் ஏற்பாடு செய்திருந்தன.