90 வயது அமெரிக்க முதியவரை ஏமாற்றி 310000 டொலர்களை பண மோசடி செய்த இலங்கைப் பெண்!!

882

இலங்கையை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் அமெரிக்காவில் 90 வயது முதியவர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் அமெரிக்கா – அலபாமாவில் உள்ள மொபைல் பிராந்தியத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யலோலா சுரங்கனி மெக்கன்ட் என்ற பெண், அமெரிக்காவில் இயங்கும் ‘அவர்ரைம்’ சமுக வலைதளத்தின் ஊடாக, முதியவருடன் அறிமுகமாகி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து 310, 000 டொலர்களை களவாடியதாக இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க முதியவரின் கணக்கில் இருந்து 310, 000 டொலர்கள் பணம், யலோலா சுரங்கனி மெக்கன்டின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும், அதை அறிந்த புலனாய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பெண் அடுத்த மாதம் தமது குடும்பத்துடன் இலங்கை திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு இவ்வாறு முதியவர் ஒருவரை ஏமாற்றி இருப்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.