இந்திய மண்ணில் ஜொலிக்க வேண்டும் ஆஸி. அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி!!

510

george-bailey

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஓட்டங்கள் குவித்தால் ஆஷஸ் தொடருக்கு அது உறுதுணையாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்திருக்கும் அவுஸ்திரேலிய அணி ஒரு 20-20, ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதற்கான அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவரான மைக்கல் கிளாக் முதுகு வலியால் அவதிப்படுவதால், ஜோர்ஜ் பெய்லி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜோர்ஜ் பெய்லி கூறுகையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும், அவுஸ்திரேலிய அணி நவம்பர் 21ம் திகதி முதல் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

இதனால் இந்திய தொடரில் சிறப்பான முறையில் ஓட்டங்கள் சேர்த்தால் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணித்தேர்வுக்கு சிறப்பாக இருக்கும்.

இத்தகவலை ஏற்கனவே பயிற்சியாளர் டேரன் லேமண் தெரிவுக்குழுத் தலைவர் ஜான் இன்வெராரிட்டி ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளனர்.

இதனை அணி வீரர்கள் கருத்தில் கொண்டு விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.