சேமமடு சண்முகானந்தா.ம.வி மாணவர் பாராளுமன்ற விளையாட்டு துறை அமைச்சால் நடத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி!

487

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலய பாடசாலை மாணவர் பாராளுமன்ற விளையாட்டுத்துறை அமைச்சால் நடத்தப்பட்ட ஆண்களுக்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட (ஆறு பந்து பரிமாற்றங்கள்) வவுனியா வடக்கு வலய அனைத்து பாடசாலைகளுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 01-07-2017 சனிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு.செ.சசிகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போட்டியில் வடக்கு வலய 12 அணிகளுக்கு மேல் பங்கெடுத்தன. அனைவருக்குமான மதிய போசன ஒழுங்கினை பாடசாலையின் பழைய மாணவர்கள் மேற்கொண்டனர்.

இறுதியில் முதலாம் இடத்தினை (வெற்றிக்கிண்ணம் மற்றும் 5000 ரூபா) புதுக்குளம் மகா வித்தியாலயமும் இரண்டாமிடத்தை (வெற்றிக்கிண்ணம் மற்றும் 3000 ரூபா) சுந்தர புரம் சரஸ்வதி வித்தியாலயமும் மூன்றாமிடத்தை மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை புதுக்குளம் பாடசாலை வீரர்கள் பெற்றுக்கொண்டனர் .