வித்தியா கொலை வழக்கு : சாட்சியம் வழங்கும் போது மயங்கி விழுந்த சிறுவன்!!

602

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவச் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் நேற்றைய தினம் 10 நிமிடம் வழக்கினை ஒத்தி வைக்குமாறு மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய “ட்ரயல் அட்பார்” தீர்ப்பாயம் முன்னிலையில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

13 வயதுடைய பாடசாலை மாணவன் இந்த வழக்கின் ஒன்பதாவது சாட்சியாளராகியுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூன்றாவது சாட்சியாளராக சாட்சி வழங்க ஆரம்பித்துள்ளார்.

சாட்சி வழங்க ஆரம்பித்து சற்று நேரத்தில் “எனக்கு மயக்கமாக உள்ளது” என அந்த மாணவர் குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் மயங்கி விழும் நிலையில் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து 10 நிமிடங்கள் சாட்சி பெற்று கொள்ளும் நடவடிக்கையை ஒத்தி வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன் பின்னர் 10 நிமிடங்களில் பின்னர் மீண்டும் குறித்த மாணவர் சாட்சி வழங்கியுள்ளார்.