தனது பிள்ளைகள் மற்றும் கணவரை விட்டுவிட்டு தனது மகளின் காதலனுடன் தாயொருவர் தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தப்பிச் சென்ற பெண்ணின் மகளின் வயது 17 எனவும் அவர் பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் வேளையில் தனது வயதை ஒத்த இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை பேணிவந்துள்ளார்.
பின்னர் இவ்விடயம் குறித்த யுவதியின் பெற்றோருக்கு தெரிய வந்தபோது அவர்கள் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காததால் இருவரும் சுதந்திரமாக தொடர்ந்தும் காதல் தொடர்பை பேணிவந்துள்ளனர்.
எனினும் யுவதியின் தாய் மகளின் காதலனுடன் கள்ளத்தனமாக காதல் தொடர்பினை பேணி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த யுவதி பிரத்தியேக வகுப்பு நிறைவடைந்து தனது காதலன் வரும்வரை காத்திருந்துள்ளார். வெகுநேரமாகியும் தனது காதலன் வராத காரணத்தினால் அவர் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார்.
வீட்டில் தனது தாய் இருக்கவில்லை. பின்னர் 35 வயதான தனது தாய் 17 வயதான தனது காதலனுடன் தப்பிச் சென்றுள்ளதனை குறித்த யுவதி அறிந்துகொண்டார். இவ்வாறு தப்பிச்சென்ற பெண் வீட்டில் பணத்தையும் எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.






