வவுனியா விபுலானந்தா கல்லூரி உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு!!

551

 
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் அனுசரணையில்  இவ்வாண்டு பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு நேற்று  (04.07.2017) 9.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை நடைபெற்றது.

இச் செயலமர்வில் பிரபல ஆசிரியர்களான S.குணசீலன் (உயிரியல்) , P. டீ.விஜேந்திரன் (இணைந்த  கணிதம்) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இச் செயலமர்விற்கு நிதி உதவியினை விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்ற செல்வி கலீபா (2008 Bio) வழங்கியிருந்தமையுடன் இவ்செயலமர்வில் 60 ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.