நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!

701


 
பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின் வனப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் திடீரென போக்குவரத்து ஸ்தம்பித்தது.காரணம் தெரியாமல் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருந்த போது, 7 அடி மலைப்பாம்பு நெடுஞ்சாலையில் படுத்திருந்துள்ளது.

இதனைக்கண்டு வாகன ஓட்டிகள் அருகில் செல்ல அச்சப்பட்டுக்கொண்டு ஒதுங்கி நின்று அதனை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர்.அப்போது, பெண் ஒருவர் மலைப்பாம்பை அசால்டாக கையில் எடுத்துக்கொண்டு அனைவரையும் பார்த்து சிரித்தபடியே அதனை கொண்டு போய் வனப்பகுதி அருகே விட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.