குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினையால் மனைவி வெளிநாடொன்றுக்குபணிப்பெண்ணாகச் சென்ற பத்து நாட்களில் கணவர் டெங்கு நோய்க்குப் பலியான பரிதாபசம்பவமொன்று நாவலப்பிட்டியில் நடந்துள்ளது.
நாவலப்பிட்டி, கெட்டபூலா பிரதேசத்தைச் சேர்ந்த பெரியசாமி தியாகராஜா (வயது 44)எனும் இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்திருக்கிறார்.
தோட்டத் தொழிலாளியான இவருக்கு பத்து மற்றும் ஆறு வயதுகளில் இரண்டு பிள்ளைகள்உள்ளனர்.
சரியான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் இவரது மனைவி பத்துநாட்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றார்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் மனைவியை வழியனுப்பிவிட்டு வந்த கணவருக்குகாய்ச்சல் ஏற்பட்டதால் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.






