நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் 85 மாணவர்களும் டெங்கு காய்ச்சலால் பீடிப்பு!!

734

நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் 85 மாணவர்களும் டெங்கு காய்ச்சலால் பீடிப்பு

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக அநேகமான வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில், நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் 85 க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இப்பாடசாலையில் 85 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்குவால் பீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் சூழலை சுத்தமாகப் பேணுவதற்கு பாடசாலை நிர்வாகமும் மாணவர்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

சிவில் பாதுகாப்பு படையினர் இன்றைய தினம் பாடசாலை வளாகத்தை சோதனைக்கு உட்படுத்தியபோதிலும், டெங்கு நுளம்பு பெருகுவதற்கான சூழல் அங்கு அவதானிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பாடசாலையின் வெளிப்புறத்தில் அநேகமான இடங்களில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கல்லூரியை அண்மித்த ஒருசில வீடுகளின் கூரைகளில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக நீர் தேங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதற்காக மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் பலரது உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது.