யாழில் இருந்து வந்த புகையிரதத்தில் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

398


யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில், வேரஹெர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதன இளம் குடும்பஸ்தரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும், சடலம் தற்போது களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.