வட கொரியாவுக்கு புதிய தடைகள் : ஆட்டத்தை தொடங்கிய மூன்று நாடுகள்!!

517

வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வடகொரியா உலக நாடுகள் மற்றும் ஐ.நாவின் எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்து ஆணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது.

கண்டம் விட்டு கண்டம் தாண்டி எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் புதிய ஏவுகணையை கடந்த 4-ஆம் திகதி வடகொரியா சோதனை செய்தது.

இதை தடுக்கும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகள் மற்றும் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா முன்வைத்தது.

இதையடுத்து வடகொரியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா கூறியது. ஆனால் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோவின் சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.