மாடுகளுக்குப் பதிலாக மகள்கள் : விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

325

மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது மகள்கள் உதவியுடன் ஏர்பூட்டி நிலத்தில் விவசாயம் செய்து வரும் தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஷெகோர் பஸந்த்பூர் பகுதியில் Sardar Barela என்ற விவசாயி ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக அவரால் மாடுகளை வைத்து நிலத்தில் ஏர்பூட்டி விவசாயம் செய்ய முடியவில்லை.

மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது இரண்டு மகள்களை மாடுகள் போல ஏர்பூட்டியை இழுக்க செய்து Barela விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிர்களை Barela விதைத்து வருகிறார்.

இரு பெண்களும் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை அவர்கள் கைவிட்டுள்ளனர்.

இதற்கிடையே இதுபோன்ற விடயங்களுக்காக சிறுமிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் விவசாயிக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட தொடர்பு அதிகாரி ஆஷிஸ் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.