குழந்தையுடன் வெடித்துச் சிதறிய தாய் : ஐ.எஸ் ஆதரவாளரின் கொடூர செயல்!!

867

 
ஈராக்கில் ஐ.எஸ் ஆதரவு தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையை கையில் வைத்திருந்தபடியே வெடியை இயக்கச் செய்து வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்துவந்த மொசூல் நகரத்தை கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக் ராணுவம் மீட்டுள்ளது. இதன்பொருட்டு அங்குள்ள மக்களும் அரசும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மொசூல் நகரத்தை மீட்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டுவந்த ராணுவத்தினர், அப்பகுதியில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றினர்.

இவ்வாற்று வெளியேற்றப்படுபவர்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அதிகம் காணப்படுவதால் ராணுவத்தினர் சோதனை என்ற பெயரில் அலைக்கழிப்பதில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று பெண் ஒருவர் குழந்தையுடன் பொதுமக்களில் ஒருவராக ராணுவத்தினருகே நடந்து வந்துள்ளார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த வெடியை இயக்கச் செய்து இறந்துள்ளார்.

இவ்வாறு அவர் செய்வதற்கு சில நொடிகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலால் இரண்டு ஈராக் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக் கொண்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது.

இந்தப் போரினால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இவர்களுக்கும் நேற்று உச்சக்கட்ட போர் நடந்தது. இதில் ஈராக் ராணுவம், மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலுமாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.