எனக்கு கிடைத்த பொக்கிஷம் : கண்ணீரால் உருகும் கருப்பின காதல்!!

316

தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆபிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

வெளிநாட்டில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பாகுபாடு பிரச்சனைகள் நடப்பது போன்று இந்தியாவிலும் வெளிநாட்டினர்களுக்கு எதிரான இனவெறி பிரச்சனைகள் நடந்தேறி வருகின்றன.

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தரமான கல்விக்காக டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் மீது டெல்லிவாசிகள் இனவெறி பாகுபாட்டை நடத்துகிறார்கள்.

இந்தியா முழுவதும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபிரிக்க மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். ஆபிரிக்காவில் இந்திய பட்டப்படிப்புகளுக்கு மதிப்பு அதிகம். அதுமட்டுமின்றி ஆபிரிக்க நாடுகளில் அடிக்கடி வேலை நிறுத்தம் ஏற்படுகிறது.

அப்போது கல்வி நிலையங்களும் மூடப்பட்டுவிடும். அதனால்தான் அங்கிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். ஒரு பக்கம் ஆபிரிக்கர்களுக்கு எதிரான இனவெறி பாகுபாடு நடத்தினாலும், மறுபுறம் அவர்கள் மீது காதல் வயப்படுகிறார்கள்.

கமரூனை சேர்ந்த கறுப்பின இளைஞர் லியோனல் ஸோங்கேவும்- இந்தியாவை சேர்ந்த மாணவி பாரதி பூரியும் காதலர்கள்.

இருவரும் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். இவர்கள் காதலர்களாக வெளியில் சென்றால் போகும் இடமெல்லாம் இன்னல்கள் கொடுக்கிறார்கள்.

போயும் போய் ஒரு கரிச்சட்டியை காதலிக்கிறாய், உனக்கு வேறு ஆளே கிடைக்காதா? என கேட்கிறார்கள். பாதியின் வீட்டிலும், உனக்கு கருப்பு தோல் தான் பிடிக்கும் என்றால் இவனைப்போன்று ஒரு கருப்பான நபரை பார்க்கிறேன் திருமணம் செய்துகொள் என வற்புறுத்துகிறார்கள்.

தன்னை யாரும் ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை என்றும் குறைபட்டுக் கொள்வார் லியோனஸ். அவர் மீது காதல் ஏற்பட அதுவே எனக்கு முதல் காரணமாக இருந்தது. நிறத்தை ஒதுக்கிவிட்டு இதயத்தை நேசிக்க ஆரம்பித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் எந்த வேற்றுமையுமில்லை. ஆனால் சுற்றி இருப்பவர்கள்தான் எங்களை வேற்றுமையாக பார்க்கிறார்கள்.

எங்களால் ஒன்றாக ரெயிலில் பயணிக்க முடிவதில்லை. அதனால் ஒரே இடத்திற்கு சென்றாலும் தனித்தனியாக பயணப்படுகிறோம் என்கிறார் பாரதி.

லியோனஸ் கூறியதாவது, என்னை ஒரு அறுவருப்பான பொருள் போன்றே எல்லோரும் பார்ப்பார்கள், இதற்கு முன்னர் நான் பிரான்சில் படித்தேன், ஆனால் அங்கெல்லாம் இப்படி அநாகரீகமாக நடந்துகொள்ளமாட்டார்கள்.

நான் வசிக்கும் வீட்டில் இருந்து குறுக்குதெருவில் நடந்து செல்லும்போது பலபேர் செருப்பினை வீசுவார்கள். ஆனால் இதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் செல்வேன்.

எங்கள் மானத்தையும், உயிரையும் விடுவதற்காக நாங்கள் கடல் கடந்து இந்தியா வரவில்லை, மாறாக நல்லதொரு கல்வியைத் தேடித்தான் வருகிறோம் என கூறியுள்ளார்.

இந்தியாவில் எனக்கு கிடைத்த ஒரே பொக்கிஷம் பாரதி. எனது படிப்பை முடித்தவுடன் பாரதியை திருமணம் செய்துகொண்டு என்னுடைய சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவேன்.