வவுனியா மாவட்டத்தில் உணவுப் பொருட்களை கையாளுதல், உணவு கழிவுகளை வெளியேற்றல் மற்றும் உணவு தரத்தினை முகாமை செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஓவியா விருந்தினர் விடுதியில் இன்று(10.07.2017) இடம்பெற்றது.
வட மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நடத்தும் இக்கருத்தமர்வில் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது உணவுப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் அதனை கையாளும் விமுறைகள் தொடர்பாகவும், சுகாதாரம் தொடர்பிலும் கருத்துரைகள் இடம்பெற்றது.
அடுத்து வரும் 13ம் திகதி மில் ஆலைகள் அரிசிமா தயாரிப்பு உரிமையாளர்களுக்கும் 14ம் திகதி பேக்கரி ஜாம் பழரசம் மற்றும் ஐஸ்கிறீம் தயாரிப்பாளர்களுக்கும் இச் செயலமர்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், உதவி பிரதேச செயலாளர் சாரதா, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி வி.பசுபதிராஜா, வைத்தியகலாநிதி மகேந்திரன், சுகாதார திணைக்கள அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், ஊள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.