
மட்டக்களப்பு, கந்தளாய் பொலிஸ் பிரிவில் வென்ராசன்புரம் குளத்தில் இருந்து பெண் மற்றும் சிறுமி ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் நேற்று மாலை இச்சடலங்களை மீட்டுள்ளனர்.
49 வயதுடைய எம்.பி.ஸ்ரீயாலதா மற்றும் 7 வயதுடைய நிலேகா பிரியதர்ஷினி ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கந்தளாய் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கென கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் மூலம் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் பாட்டி, பேத்தி உறவுடையவர்களாவர்.
கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.





