பிரித்தானியாவில் முன்னாள் மனைவியின் காதலனை கொலை செய்த இலங்கையர்!!

544

 
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையரை மற்றுமொரு இலங்கையர் கொலை செய்த வழக்கு பிரித்தானியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை நபர் ஒருவரின் மனைவி அவரை விவகாரத்து செய்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனால் பொறாமைப்பட்ட முன்னாள் கணவர், மனைவியின் வாழ்க்கைக்கு புதிதாக வரும் நபரை கடத்தி சென்று அவரை தாக்கி கொலை செய்துள்ளார்.

ஞானசந்திரன் பாலச்சந்திரன் என்ற இலங்கையர் தனக்கு போட்டியாக வந்த சுரேன் சிவானந்தன் என்பவரை கொலை செய்ய இருவரை நியமித்துள்ளார்.

17 வயதான இளைஞர் உட்பட மூவர் இணைந்து 12 மணி நேரம் சுரேனை சிறைப்பிடித்தனர். பின்னர் Milton Keynes என்ற பிரதேசத்தை சுற்றி பல்வேறு இடங்களில் சுரேன் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக 32 வயதான அவர் கொல்லப்பட்டார். தலையில் பாரிய காயங்களுக்கான அவரது இரத்தம் படிந்த உடை குளம் ஒன்றுக்கு அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவரது உடல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ம் திகதி அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டதாக வழக்கறிஞர் Prosecutor John Price QC தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது உச்சந்தலையில் தீவிர காயம் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டுள்ளது.

“அவரது உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. நீண்ட கால வன்முறைக்கமைய சுரேன் பழி தீர்க்கப்பட்டுள்ளார் என வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறந்த சுரேன், பாலச்சந்திரனை விவாகரத்து செய்த மனைவியான ரகுபதி அன்னலிங்கம் என்பவரை சந்திக்க எத்தனை வாரங்களுக்கு முன்னர் சென்றார் என Luton Crown நீதிமன்ற ஜுரி வினவியுள்ளது.

இந்த ஜோடி இலங்கையில் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி கொண்டதோடு, பேஸ்புக் மூலம் மீண்டும் இணைந்தனர், பின்னர் ரகுபதி தனது மகிழ்ச்சியற்ற திருமணத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தார்.

18 ஆண்டுகளாக பார்க்காத பெண்ணை சந்திக்க சுரேன் பிரித்தானியா சென்றுள்ளார். ஆனால் இலங்கையிலுள்ள கலாச்சாரம் இந்த உறவை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதால், அவர்களது உறவு இரகசியமாக இருந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 38 வயதான பாலச்சந்திரன், “நீ உன் கணவனுடன் வாழ முடியாது, எனவே நீ வேறு யாரையாவது அழைத்துச் செல், நீ ஒரு தவறானவள்” என கூறியுள்ளார்… என நீதிபதியிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற இரண்டு சந்தேகநபர்களான 30 வயதான கிரோராஜ் யோகராஜ் மற்றும் 24 வயதாக பிரசாந் தேவராசா ஆகியோர் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

-தமிழ்வின்-