சடலமாக திரும்பிய தாய் : கதறும் மகன்!!

666

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பிய பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர், 21 பேர் காயம் அடைந்தனர்.

இதில் உயிரிழந்த நிர்மலா என்ற பெண்ணின் மகன் உருக்கமாக கூறியுள்ளதாவது, அமர்நாத் யாத்திரை சென்ற எனது தாய் நிர்மலா தாக்குர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது பால்தால் என்ற பகுதியில் சென்றபோது, தங்களது பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதாக கூறினார்.

இதைகேட்ட பதறிய நான், உடனடியாக வீட்டுக்கு திரும்புங்கள் என கூறினேன், ஆனால் அவர் யாத்திரையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறேன் என கூறினார்.

தீவிரவாத தாக்குதலில் என் தாய் கொல்லப்பட்டது இன்று அதிகாலை 5.30 மணிக்கு தான் எனக்கு தெரியும். தாயுடன் யாத்திரை சென்ற பாக்கியமணி என்பவர் போன் செய்து கூறினார்.

இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்தார். பத்திரமாக திரும்புவேன் என்று கூறிய எனது தாய் பிணமாக திரும்புவது எனது நெஞ்சை பிளக்கிறது என கூறியுள்ளார்.