குற்றவாளிகளின் புகைப்படங்களை நீக்க கூகுள் முடிவு!!

378

google-services

குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன.

இவற்றை தனது தேடுதளத்தில் இருந்து நீக்குவதால் குற்றவாளிகள் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பாக இருக்க முடியும். சட்ட அமலாக்க கழகங்களின் உதவியுடன் இது போன்ற மக் ஷாட் புகைப்படங்களை பெற்று அவற்றை பொது மக்கள் பார்க்கும் வகையில் வெளியிடுவதற்கு என பல்வேறு வலைதளங்கள் உள்ளன. இதனை பொது சேவையாகவே கருதி செய்து வருகின்றன.

எனினும் இதனால் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு நல்ல பணி அல்லது வீடுகளில் வசிப்பது போன்ற எண்ணங்கள் அமைவது குற்றவாளிகளுக்கு சாத்தியமில்லாமல் போகிறது. இது போன்ற தளங்களில் புகைப்படங்கள் வெளியாகாமல் இருப்பதற்கு 400 டொலர்கள் அல்லது அதற்கு மேல் ஒரு தொகை வசூலிக்கப்படுகின்றன. ஆனால், கூகுள் போன்ற தேடுதளத்தில் இது போன்ற புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

எனவே குற்றவாளிகளுக்கு பயன் சேரும் வகையில் இது போன்ற புகைப்படங்களை நீக்குவதற்கு கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது நிறுவனத்தின் குழுவானது தேடு தளத்தின் முடிவுகளை மேம்படுத்த தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பே பால், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர் அண்ட் மாஸ்டர்கார்டு போன்ற இணையதளம் வழியே வர்த்தகம் மேற்கொள்ள உதவும் நிறுவனங்களும் இத்தகைய மக் ஷாட் புகைப்படங்களை நீக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.