வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!

873

 
வவுனியாவில் இன்று (13.07.2017) காலை முதல் நகரின் மத்திய பகுதிகளான சந்தைப்பகுதி அதனை அண்டிய குளப்பகுதிகளில் வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள், நகரசபை ஊழியர்கள் பொலிசாருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர். சந்தை கட்டிட உரிமையாளர்கள் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.