வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 202வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது!!

671

பண்டாரவன்னியனின்

பிரிட்டிஸ்காரருக்கு எதிராக போராடி தமிழரின் வீரத்தை உலகெங்கும் பறைசாற்றிய மாவீரன் பண்டாரவன்னியனின் 202ஆவது ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் 31ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்த தினத்தை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்ளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா நகர சபையும் பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் இணைந்து வவுனியா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிலையில் எதிர்வரும் 31ம் திகதி காலை 8.30 தொடக்கம் 9.30 மணிவரை வவுனியா மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறும். காலை 9.30 தொடக்கம் நண்பகல் 1.30 மணிவரை கலை நிகழ்வுகளும் நினைவுப்பேருரைகளும் நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெறும்.

பண்டாரவன்னியனின் நினைவு தினத்தன்று அவரது நினைவுக்கல் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு கற்சிலைமடுவில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

pandaravanniyan