140 பயணிகளுடன் சென்ற கனேடிய விமானத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்து!!

263

140 பேருடன் தரையிறங்க முயன்ற ஏர் கனடா விமானம், பெரும் ஆபத்திலிருந்து தப்பியிருப்பது சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏர் கனடா விமானமே ஆபத்திலிருந்து தப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

ஓடுபாதையில் தரித்து நின்ற மற்றொரு விமானத்திலிருந்து 30 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அது பறந்திருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோரோன்டோவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற AC 759 விமானம், தரையிறங்கத் தயாரானது. அப்போது ஓடுபாதையில் இருந்த நான்கு விமானங்களை உரசி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் ஒரு விமானத்துடன் ஏர் கனடாவுக்கு இருந்த இடைவெளி 30 மீட்டர் மட்டுமே என்று கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்தவுடன் விமானி விமானத்தை மேலே ஏற்றியதால், ஏற்படவிருந்த பேரனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.